Latest News

குஜராத்: 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்

 குஜராத்: 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் 5 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்த சம்பவம் நடந்து இருக்கிறது.

பாவ்நகர் மாவட்டத்தில், பாஞ்ச் பிப்லா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பாலியா. இந்தப் பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருந்தன. அவர் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்திருக்கிறார். 

இந்த நிலையில் இவர் நேற்று அங்குள்ள ஒரு கிணற்றில் தன் 5 குழந்தைகளையும் வீசி விட்டு தானும் குதித்து விட்டார். இதைக் கண்ட கிராமவாசிகள் சிலர், அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் உடனடியாக கிணற்றில் குதித்தனர்.

ஆனால் அதற்குள் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். கீதா பாலியாவையும், 10 வயதான மூத்த மகள் தர்மிஸ்தாவையும் மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. இறந்த குழந்தைகள் 1½ வயது முதல் 8 வயது வரையிலானவர்கள்.

2 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்த நிலையில், கெட்ட ஆவியின் தூண்டுதலால்தான் பிள்ளைகளை கிணற்றில் வீசிவிட்டு, நானும் குதித்தேன் என்று கீதா பாலியா போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.