Latest News

காரணமின்றி என்சிசி படையினரின் தகவல்களை திரட்டுகிறதா நரேந்திர மோதி செயலி?

13 லட்சம் பேர் உறுப்பினராக இருக்கும் வலுவான தேசிய மாணவர் படையை (என்சிசி) சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருடைய செல்பேசி எண்களை சேகரிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி விரும்புவதாக இந்தப் படையின் உள்ளக தொடர்பியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

பீம் செயலி (BHIM App) மற்றும் நரேந்திர மோதி செயலியையும் (Narendra Modi App) பதிவிறக்கம் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி தேசிய மாணவர் படையின் பொது இயக்குநரின் சார்பாக உத்தரவிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு கராணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 

இது பற்றிய தகவல் வெளியானவுடன், நரேந்திர மோதி செயலியை பயன்படுத்த என்சிசி பிரிவினரிடம் கேட்டு கொள்ளப்பட்டதோடு, இது பற்றிய கேள்விகள், புகார்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்க தேசிய மாணவர் படையின் பொது இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பிஎஸ் சஹ்ராவாட் அழைப்பு விடுத்திருந்தார். 

தேசிய மாணவர் படையினரோடு, பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக தொடர்பு வைத்திருக்க விரும்புவதாக இதற்கு காரணம் கூறப்பட்டது.

இதனால் பதிவு செய்யப்படும் தரவுகளின் பாதுகாப்பு பற்றிய கவலைகளால் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்திய இந்த கடிதம் தெளிவற்ற நிலையை உருவாக்கி, செயலிகளை பதிவிறக்க மாணவர் படையினருக்கு வழிகாட்டுகிறது. 

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கும் இந்த தேசிய மாணவர் படை, நாட்டில் மொத்தமுள்ள 713 மாவட்டங்களில் 706ல் காலூன்றியுள்ள நிலையில், இவர்களின் தரவுகள் வன் (hard) மற்றும் மென் (soft) வடிவங்களில் வழங்கப்பட வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதிக்குள் சிறப்பு கூரியல் மூலம் தரவுகளை தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
"பிரதமரின் செயல் நடவடிக்கை" என்று தலைப்பிடப்பட்ட இந்த கடிதம், முதல் பக்கத்தில் "மொத்த படையினரின் செல்பேசி எண்ணோடு 2ஆ ஆண்டு ஜேடி/ஜேடபிள்யூ மற்றும் 3ஆம் ஆண்டு எஸ்டி/எஸ்டபிள்யூ தரவுகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. 

2ஆம் ஆண்டு ஜேடி/ஜேடபிள்யூ மற்றும் 3ஆம் ஆண்டு எஸ்டி/எஸ்டபிள்யூ தரவுகள் தெளிவாகவும், தனியாகவும் தெரிவதற்காக வேறுபட்ட நிறத்தில் எழுதப்படுதல் நல்லது என்று இந்த கடிதம் அழுத்தம் கொடுக்கும் வகையில் மீண்டும் குறிப்பிடுகிறது. 

தேசிய மாணவர் படையின் இணையதளத்தின்படி, பள்ளியிலுள்ள மாணவர்கள் (13ஆம், அதற்கு மேலான வயதுடையவர்) தேசிய மாணவர் படையின் இளையோர் பிரிவினர் (ஜேடி) ஆகும். எஸ்டி என்றால், தேசிய மாணவர் படையின் கல்லூரி மற்றும் 12 கல்வி நிலையங்களின் (XI மற்றும் XII வகுப்புகள்) ஆண் மாணவர்கள்.

இவ்வாறு பெண் மாணவியரின் மூத்தப் பிரிவினர் (எஸ்டபிள்யூ) குறிப்பிடப்படுகின்றனர். 

ஜேடி/ஜேடபிள்யூ படையினர் 13/18.5 வயதினராக இருக்கும் நிலையில், எஸ்டி/எஸ்டபிள்யூ பிரிவினர் 24 வயது வரை உள்ளவராக இருப்பர். 

இவ்வாறு வழங்கப்படுகின்ற தரவுகளின் உண்மை தன்மையை சோதித்தும், ஒரே தகவல்களும், தொலைபேசி எண்களும் மீண்டும் தெரிவிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்தும் இந்த தரவுகள் வழங்கப்பட வேண்டும் என்று இக்குழுக்களின் கட்டளையதிகாரிகளுக்கு தௌவான அறிவுறுத்தல்கள் இந்த கடிதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் மாணவ படையினரின் விபரமான தரவுகள் ஏன் சேகரிக்கப்படுகின்றன என்று தேசிய மாணவர் படை விளக்கம் அளிக்கவில்லை. 

இதுபற்றி பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது, கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். 

நரேந்திர மோதி செல்பேசி மென்பொருளால் முன்னதாக அந்தரங்க தகவல்கள் பறிபோவது பற்றி கேள்வி எழுப்பியபோது, தேசிய மாணவர் படையும், பாதுகாப்பு அமைச்சகமும் பதிலளிக்கவில்லை. 

தேசிய மாணவர் படையின் இத்தகைய நடவடிக்கை இதற்கு முன்னர் நடைபெறாதது என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த படையோடு தொடர்புடைய தனிநபர்கள் பலரும் தெரிவித்தனர். 

பிரதமரின் செய்திகளை பரப்புரை செய்வதற்கு இந்த தரவுகளை தேசிய மாணவர் படை பயன்படுத்தி கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று இந்த நடவடிக்கையை சிலர் நியாயப்படுத்தியுள்ளனர். 

ஆனால், எந்தவொரு காரணமும் இல்லாமல் குறிப்பிட்ட பிரிவினரை இலக்கு வைத்து சேகரிக்கப்படும் இந்த தரவுகள் அந்தரங்கத்தில் ஊடுருவதாக அமையும் சாத்தியக்கூறு நிலவுகிறது என்று பிறர் கவலை வெளியிட்டுள்ளனர். 

இந்த தரவு தொகுப்பை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. தேசிய படையை சேர்ந்த பலரும் கிராமப்புற மற்றும் ஏழை வீட்டு பின்னணியை கொண்டவர்கள் என்பதால், அனைவரும் திறன்பேசிகள் வைத்திருப்போராக இல்லை. இது பற்றி மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாக ஒரு வட்டாரம் கூறியுள்ளது. 

பிரதமரின அலுவலக செல்பேசி மென்பொருளாக மோதி செல்பேசி மென்பொருள் விளங்குகின்ற நிலையில், பீம் செயலி என்பது 'பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி' என்பதன் சுருக்கமாகும். எளிதாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவை வழங்கும் மேடையாக இது திகழ்கிறது.
லாபநோக்கமற்ற நிறுவனமும், இந்தியாவில் நடைபெறும் எல்லா சில்லறை விற்பனைக்கும் பணம் செலுத்தும் ஒரே நிறுவனமாகவும் விளங்கும் இந்திய தேசிய பணம் செலுத்தும் நிறுவனத்தால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
என்சிசி & பாதுகாப்பு அமைச்சகம் விடையளிக்காத விடயங்கள்
  • என்சிசியிலுள்ள குறிப்பிட்ட குழுக்களை சேர்ந்த உறுப்பினரின் செல்பேசி எண்களை பிரதமர் சேகரிப்பதற்கான காரணம்.
  • சேகரிக்கப்படும் இந்த தரவுகள் எதற்கு பயன்படுத்தப்படும்.
  • என்சிசி இதனை நடைமுறையாக கொண்டிருக்குமா மற்றும் பின்தங்கிய பின்னணியுடைய மாணவர்களை இது பிரிக்காதா
  • இந்த மென்பொருளை தரவிறக்க விரும்பாத மாணவர் படையினருக்கு வேறு ஏதாவது தெரிவு உள்ளதா
  • அந்தரங்கம் பற்றிய கவலைகளை எதிர்கொள்ள என்சிசி மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தேசிய மாணவர் படை (என்சிசி)
"இளைஞர் முன்னேற்ற இயக்கம்" என்ற பிரிவில் தேசிய மாணவர் படை 1948ம் ஆண்டு உருவானது. 

ராணுவ படைப்பிரிவுகளில் தங்களின் தொழில்முறை வாழ்க்கையை இளைஞர்கள் தேர்வு செய்ய ஊக்கமூட்டுவதை தன்னுடைய நோக்கங்களில் ஒன்றாக வைத்திருக்கும் என்சிசி, இந்தப் படையினர் ராணுவ சேவைதான் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை படுத்துவதில்லை. 

இந்தப் படையில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 13. அதிகபட்ச வயது 24 ஆகும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.