Latest News

புற்று நோயாளிக்கு கடைசிகட்ட சிகிச்சை அளிக்க மந்திரவாதியை அழைத்த டாக்டர்

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவைசிகிச்சை அளித்த டாக்டர், அவருக்கு சூனியம் எடுக்க மந்திரவாதியை அழைத்து, மருத்துவமனையிலேயே பூஜைசெய்த சம்பவம், புனே மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தட்டவாடி எனும் பகுதியைச் சேர்ந்தவர், சந்தியா சோனாவேன்(24). இவர், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய் காரணமாக, அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மார்பில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், நோய் முற்றிலுமாகக் குறையாமல், அதற்கு நேர்மாறாக நோயின் தன்மை மிகவும் அதிகரிக்கத் தொடங்கியது.

இதையடுத்து, மருத்துவரின் ஆலோசனைப்படி தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடர திட்டமிட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டும், சந்தியா சோனாவேனின் நோய் குணமாகாமலும், உடல்நலத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்ததாலும், சந்தியா சோனாவின் உறவினர்கள் மற்றும் அவரும் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானார்கள்.

இதனையடுத்து, கடந்த மாதம் 21-ம் தேதி, டாக்டர் சவான், ஒரு மந்திரவாதியை மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார். அதன்பின், சந்தியா சோனாவேன் சிகிச்சைபெற்று வந்த ஐ.சி.யு., அறைக்கு, அந்த மந்திரவாதியை அழைத்துச்சென்று, 'கடைசிகட்ட சிகிச்சையை இவர் தர உள்ளார்' என்று கூறினார். அந்த மந்திரவாதி, மந்திரங்களை ஓதி, சூனியம் மற்றும் எந்திர தந்திரங்களை எடுப்பதாக, பூஜை நடைமுறைகளைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

இதை, அருகில் இருந்து கவனித்துவந்துள்ளார் டாக்டர். இதைச் சற்றும் எதிர்ப்பார்காத, சந்தியா சோனாவின் சகோதரர், அங்கு நடந்ததை வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தியா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, சந்தியா சோனாவின் குடும்பத்தினர், அந்த வீடியோவுடன் போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்ற போலீஸார், மந்திரவாதியைக் கைது செய்து, டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவம்குறித்து, 'எங்கள் மருத்துவமனையில் இது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும், ஐசியூ-வில் நோயாளியைத் தவிர வேறு யாரையும் அனுமதிப்பதில்லை' என தீனாநாத் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

A video has gone viral about some rituals being performed on a patient inside ICU in presence of a doctor in #Pune based hospital. @dna pic.twitter.com/uuv5anyg47

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.