Latest News

சொந்தமாக பிளாக்செயின் தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது கூகுள்.!

தனது போட்டியாளர்களை முந்தி செல்லும் முயற்சியில் கூகுள் களமிறங்குகிறது. தனது கிளவ்டு வணிகத்தை ஆதரிக்கும் வகையில், பிளாக்செயின் தொடர்பான தொழில்நுட்பத்தை சொந்தமாக செய்யும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஆன்லைனில் வெவ்வேறு வழிகளில் செயல்படும் தொழில்நுட்பத்திற்கு பயன்படும் எமர்ஜிங் ஸ்டார்ட்அப்களுக்கு நேரடி போட்டியாளராக செயல்பட உள்ளது.

இது குறித்து ப்ளூம்பெர்க்கில் வெளியான ஒரு செய்தியில், லெட்ஜர் சிஸ்டத்திற்காக கூகுள் கூட உரிமை பெற உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்களுக்கு தங்களின் சர்வர்களை தாங்களாகவே இயக்கி கொள்ள முடியும். இது தொடர்பான எந்தொரு தயாரிப்பின் அறிமுக நேரம் குறித்தும் இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கூகுள் அடியெடுத்து வைத்துள்ள இந்த புதிய படிகட்டு, தனது போட்டியாளர்களிடம் இருந்து அதை வேறுபடுத்தி காட்டும். இதற்காக டிஜிட்டல் லெட்ஜர் அனுபவத்தோடு ஸ்டார்ட்அப் மீது இந்நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்கிறது. 

இந்த காரியத்தில் நெருங்கி பணியாற்றும் சிலர் இது குறித்து கூறியதாக, இந்த செய்தியில் தெரிவித்திருப்பதாவது, கிளவ்டு தலைவர் டயான் கிரீன் என்பவருக்கு பணி அறிக்கை அளிக்கும் இந்நிறுவனத்தின் உள்கட்டமைப்பு குழு, கடந்த சில மாதங்களாக பிளாக்செயின் கட்டமைப்பு குறித்த உருவாக்க பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ப்ளூம்பெர்க்கிடம் ஒரு கூகுள் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 'பல புதிய தொழில்நுட்பங்களைப் போல, பிளாக்செயின் மூலம் கிடைக்கும் சாத்தியமான பயன்களைக் குறித்து கண்டறிய பல்வேறு அணிகளில் உள்ள தனிநபர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் எந்தொரு சாத்தியமான பயன்கள் அல்லது திட்டங்கள் குறித்த நமது யூகம், வெகு சீக்கிரமாக வந்துள்ளது' என்றார். இந்த தேடல் ஜாம்பவான் நிறுவனத்திற்கு இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம், பல சவால்களையும் வாய்ப்புகளையும் வழங்கும். கம்ப்யூட்டர்களின் விநியோக நெட்வர்க்குகளில் இயங்கும் டிஜிட்டல் லெட்ஜர்கள், ஒரு ஒற்றை நிறுவனத்தை மையமாக கொண்டு செயல்பட்டு தகவல்கள் இழக்கும் அபாயமும் தவிர்க்கப்படும்.

இதை தவிர, மால்வேர் விளம்பரங்களுக்கான பிரச்சாரத்தை கட்டுபடுத்தும் விதமாக, தனது தளத்தில் இருக்கும் 3.2 பில்லியன் தீய விளம்பரங்களை கூகுள் நிறுவனம் நீக்க போவதாக கூறப்படுகிறது. இந்த மால்வேர் விளம்பரங்களோடு சேர்த்து, தனது தளத்தில் உள்ள பிஷிங் மோசடிகளையும் நிறுத்தப் போவதாக கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் தனது நெட்வர்க்கில், மால்வேர் கொண்ட இணையதளங்களுக்கு பயனர்களை அழைத்து செல்ல முயற்சிக்கும் 79 மில்லியன் விளம்பரங்களை கூகுள் முடக்கப் போவதாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தேடல் தீர்வுகளில் காட்டப்பட்ட, ஏறக்குறைய 400,000 பாதுகாப்பற்ற இணையதளங்களை கூகுள் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பயனரை தேவையில்லாத சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்ய வைக்க முயற்சிக்கும் 48 மில்லியன் விளம்பரங்களுடன் கிளிக் செய்ய தூண்டும் வகையிலான 66 மில்லியன் விளம்பரங்களை கூகுள் நிறுவனம் நீக்கிவிட்டதாக, இந்த செய்தி தெரிவிக்கிறது. கடந்தாண்டில் பல பொய்யான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிரான தனது கொள்கைகளில் பல மேம்பாடுகளை கூகுள் செய்துள்ளது.

அபாயகரமான மற்றும் தரக்குறைவான' உள்ளடக்கங்களை கொண்டு தனது கொள்கையை மீறிய ஏறக்குறைய 320,000 வெளியீட்டாளர்கள், ஏறக்குறைய 90,000 இணையதளங்கள் மற்றும் சுமார் 700,000 மொபைல் அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை கூகுள் நிறுவனம் அகற்றி உள்ளது. மேலும் கருத்துகளை திருடும் செயல்பாட்டை தடுக்கும் வகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு 12,000-க்கும் மேற்பட்டவற்றை முடக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
source: gizbot.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.