Latest News

நிழல் ராஜாங்கம் நடத்திய சசிகலா..." எப்படி அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தினார்? கிருஷ்ணபிரியா பரபரப்பு வாக்குமூலம்

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அதிமுக வேட்பாளர்களை முழுமையாக இறுதி செய்ததே அவர்தான் என்றும் தலைமைச் செயலகத்தில் பணியாற்றுபவர்கள் பணிபுரியும் அதிகாரிகளையெல்லாம் சசிகலாதான் இறுதி செய்வார்.
தனக்கு தேவைப்படுவோரை, நெருக்கமானவர்களை அங்கே நியமிப்பார் என்றெல்லாம் கிருஷ்ணபிரியா ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம இருப்பதாக பல்வேறு தரப்பினர் குரல்கொடுத்து வந்த நிலையில் மரணம் உள்ள மர்மத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை ஆணையம் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆணையத்தில், ஜெயலலிதாவுடன் தொடர்புள்ள பலரும் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். இந்த விசாரணை வளையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவும் வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபிரியா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது தற்போது வெளியாகியுள்ளது.

இதில், அதிமுக கட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் சசிகலா மிகுந்த செல்வாக்கு பெற்றவராக இருந்தார். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது எல்லாமே சசிகலாதான். அரசு பணியிடமாற்றங்களிலும் சசிகலா ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

கலெக்டர் முதல் அனைத்து உயர் அதிகாரிகள் நியமனமும் சசிகலா சொற்படி நடந்தது. அதிகாரிகள் மொத்தமாக நேரடியாக சசிகலாவிடம் பேசும் வகையில்தான் வைக்கப்பட்டிருந்தனர். எனவே நிழல் ராஜாங்கமே நடத்தப்பட்டது. சசிகலா கை காட்டுபவர்கள்தான் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளாக பணியாற்றினர். என கூறியிருக்கிறார்.

மேலும் அதில், 2011க்கு பிறகு நிலைமை மாறியது. 2012க்கு பிறகு சசிகலாவின் ஆதிக்கம் கட்சி மற்றும் ஆட்சியில் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இவ்வாறு கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 டிசம்பரில், சசிகலாவை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டார், அதுமட்டுமல்லாமல் போயஸ் இல்லத்தில் இருந்தும் வெளியேற்றினார். ஆனால், சில மாதங்களுக்கு பிறகு சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா என வாக்குமூலத்தில் இவ்வாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.