Latest News

பெண் செய்தியாளரிடம் நீங்க அழகா இருக்கீங்கன்னு பொறுப்பாக பதில் சொன்ன அமைச்சர்


 அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளரிடம் நீங்க அழகா இருக்கீங்க என்று தமிழக அமைச்சர் ஒருவர் பதில் சொன்ன விடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த முக்கிய அமைச்சர்களிடம், தமிழ் செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்கள் பின்தொடர்ந்து சென்று கேள்வி எழுப்பினர்.
அப்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன என கேள்வி எழுப்பினார். கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரைப் பார்த்ததுமே, அமைச்சர் விஜயபாஸ்கர் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னார். அதற்கு பதிலளித்துவிட்டு அடுத்தடுத்த கேள்விகளை செய்தியாளர் தொடர்ந்து கேட்டதற்கு, கூட்டம் தொடர்பான அறிக்கை வழங்கப்படும். மூத்த தலைவர்கள் சொல்வார்கள். நீங்க அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க என்று 3 முறை சொல்லிவிட்டு மிகப் பொறுப்பாக அங்கிருந்து சென்றார் அமைச்சர்.


இந்த விடியோக்கள் ஆங்கில செய்தி ஊடகங்கள் மூலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.