Latest News

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் 26 கைதிகள்!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் 165 மையங்களில் 43, 983 பேர் தேர்வு எழுதுகின்றனர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் 26 சிறைக் கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி மாவட்டத்தின் 165 மையங்களில் 43,983 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 22,151 மாணவிகளும், 21,832 மாணவர்களும் தேர்வு எழுதுகிறார்கள். அத்துடன், கண்பார்வையற்றவர்கள் உள்ளிட்ட 108 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த 19 சிறைவாசிகள், மதுரை மத்திய சிறையில் உள்ள 7 சிறைவாசிகள் என மொத்தம் 26 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்தத் தேர்வுக்காக மதுரை மத்திய சிறைச்சாலையைச் சேர்ந்த 7 கைதிகளும் நேற்றே பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க 164 முதன்மை கண்காணிப்பாளர்கள், 30 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 164 துறை அலுவலர்கள், 8 பறக்கும் படைகள், 32 வழித்தட அலுவலர்கள் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.