Latest News

தோட்ட வேலை பார்க்கும் லாலு

கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லாலுவுக்கு சிறையில் தோட்ட வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசாரணை முடிந்து ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாலு அவரது டுவீட்டரில்; "பா.ஜ.,கொள்கைகளை பின்பற்றி வாழ்வதை விட சிறையில் சாவதே மேல், சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் " என கூறியிருந்தார். அவரது மகன் தேஜஸ்வி மேல் முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு சிறையில் தோட்ட வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளார். காலை 9 மணி முதல் 3 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் தோட்ட வேலை செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு 93 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.