Latest News

செய் அல்லது செத்துமடி, ஜெய்ஹிந்த் இரண்டும் 75 வருடங்களை கடந்து நிற்கிறது

வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும்  ஐஎன்ஏவை நினைவு கூறுவோம்
வெள்ளையனே வெளியேறு தினத்தின் ஆகஸ்ட் 9 ஆம் நாள் 1942 ஆம் நாள்  வைரவிழா கண்டு இன்றோடு 75 வருடங்கள் ஆகிவிட்டது.   கிரிப்ஸ் குழுவானது இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை இங்கிலாந்திற்கு சாதகமாக ஈடுபட வைக்க இந்தியாவிற்கு இரண்டாம் உலகபோருக்குப்பின் டொமினியன் அந்தஸ்து அதாவது தன்னாட்சி வழங்குவதாக வாக்களித்தது பிரிட்டிஸ் அரசு ஆனால் அதற்கு இந்தியா இரண்டாம் உலகபோரில் இங்கிலாந்திற்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று இராஜதந்திர காயை நகர்த்தியது .  
 
இதனை உணர்ந்த இந்திய தலைவர்கள் நடுநிலை வகித்தனர் கிரிப்ஸ்க்கு எந்த பதிலும் தரவில்லை கிரிப்ஸ் மிஸன் தோற்றது . 1942 ஜூலை 15 ஆம் நாள் முழுசுதந்திரம் தீர்மானம் இயற்ற வேண்டி மீண்டும் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க இருந்த வேளையில் இராஜாஜிஉட்பட சில தலைவர்கள் அதனை ஏற்கவில்லை. ஆனால் கிரிப்ஸ் இந்தியாவின் தன்மானத்திற்கும் சாத்வீகத்திற்கும் விட்ட சாவலாக இருந்தது என தலைவர்கள் கொந்தளித்தனர். இறுதியாக இந்தியா வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை ஆகஸ்ட் 8 ஆம் நாள் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அத்துடன்   ஆகஸ்ட் 9 ,1942 ஆம் நாள் பம்பாயில் இருந்து வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை செய் அல்லது செத்துமடி என்னும் வாசகத்தோடு தொடங்கினார்கள் காங்கிரஸ் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டு சாத்வீகத்திலும் அதிதீவிர போராட்டம் நடைபெற்றது . இந்தியாவின் அதிரடியான நடவடிக்கையால் நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது காந்தி , நேரு , பட்டேல் போன்றோர் கைது செய்யப்பட்டனர் . காந்திசிறையில் இருக்கும் போது காந்தியின் மனைவி, செயலாளர் இறந்தனர். காந்தி சிறையில் இருக்கும்போது லட்சகண்க்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் மக்கள் வீதியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் , பெண்கள் அனைவரும் போராட்டத்தில் பங்குகொண்டு எழுச்சியூட்டினார்கள். காங்கிரஸ் தலைவர் இன்றி தடுமாறியது அப்பொழுது இளம்தலைவராக அருணா ஆசப் அலி அவர்கள் தலைமையேற்றார் . இந்த போராட்டம் நாடு முழுவதும் மக்களை எழுச்சியூட்டியது . அத்துடன் பிரிட்டிஸ் அரசின் சாம்ராஜ்யம் முடிவிற்கு வந்தவிட்டது இனி நாம் இங்கு நிலைத்திருக்க முடியாது என்று பிரிட்டிஸ் அரசு முடிவு செய்துவிட்டது.

இந்திய தேசிய இராணுவம் : 1942 ஆம் நாள் இதே மாதத்தில் ஐஎன்ஏ தொடங்கப்பட்டது நாட்டின் மிகமுக்கிய திருப்பங்களாக இது இருந்தது . பிரிட்டிஷ்க்கு இருப்பக்கமும் அடிவிழுந்தது . இந்தியாவின் இருபெரும் துருவங்களும் தாக்கும் வேலையில் பிரிட்டிஸ் சிக்குண்டு சிதறியது இந்தியாவின் ஒருபக்கம் நாடுமுழுவதும் காந்தியின் "செய் அல்லது செத்துமடி" மறுபக்கம் சுபாஷ் சந்திரபோஸின் "ஜெய்ஹிந்த்" என வெகுண்டு எழுந்த வேளையில் பிரிட்டிஸ் அரசு நடுநடுங்கியது .
இளைஞர்கள் கடமை : நாட்டிற்குள் வெள்ளையனே வெளியேறு நாட்டிற்கு வெளியே ஆசிய கண்டமே நடுநடுங்க செய்த இந்திய தேசிய இராணுவம் பிரிட்டிஸ் இந்தியாவை ஓடஓட விரட்டியடித்தது . இன்றோடு 75 ஆண்டுகளை கடந்துவிட்டோம் வெள்ளையனே வெளியேறு இந்த நன்நாளில் இந்தியாவின் இளைஞர்கள் அனைவரும் கற்கவேண்டியது தன் நம்பிக்கை, போராரட்டம் , சுயநலம்ற்ற போக்கு இதனை உறுதியாககொண்டு நம் முன்னோர்கள் தியாகத்தினை போற்றுவோம் . இந்நாளில் நினைவுகூறுவோம் இந்திய தேசிய இயக்கத்தை இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டு மக்களை காக்க முனைவோம். இந்திய தேசத்தின் இளைஞர்கள் மாணவர்களாக இருந்து வருங்காலத்தினை சிறப்பிபோம். இன்று பார்லிமெண்டில் வெள்ளையனே வெளியேறுவின் 75 ஆம் ஆண்டு வைரவிழாவின் சிறப்பு கூட்டம் நடைபெறும் நாளில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம் பூஜ்ய நேரம் விடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளையனே வெளியேறு பற்றி பேசுவார்கள் .

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.