Latest News

மோதல் உச்சகட்டம்-மன்னார்குடி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா போஸ்டரில் தினகரன் படத்துக்கு திவாகரன் தடை!

 மோதல் அம்பலம்
மன்னார்குடியில் திவாகரன் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா போஸ்டர்களில் சசிகலா, எடப்பாடி படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதிமுக துணைப் பொதுச்செயலரும் திவாகரன் அக்கா மகனுமான தினகரனின் படம் எங்குமே இடம்பெறவில்லை. தினகரன் - திவாகரன் இடையேயான மோதலை இது அம்பலப்படுத்தி உள்ளது. சசிகலா வசம் அதிமுக சிக்கிய போது, அதிமுகவே நாங்கள்தான்; நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என அவரது குடும்பத்தினர் கொக்கரித்தனர். ஆனால் சசிகலா சிறைக்குப் போக அவரது அக்கா மகன் தினகரனை துணைப் பொதுச்செயலராக்கினார். இதில் சசிகலாவின் தம்பி திவாகரன் கடும் அதிருப்தி அடைந்தார். தினகரனும் திவாகரன் பேச்சை யாரும் கேட்கக் கூடாது என கட்டளையிட்டு ஆட்சி, கட்சி இரண்டையும் கபளீகர செய்ய துடித்தார். அவரும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சிறைக்குப் போனார்.

திவாகரன் வியூகம் இதில் திவாகரன் தரப்பு பெரும் மகிழ்ச்சியடைந்தது. திவாகரன் மகன் ஜெயானந்துக்கு அதிமுகவில் மாநிலப் பதவியை பெற்று கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தார் திவாகரன். 

எடப்பாடியுடன் கைகோர்ப்பு அதேநேரத்தில் முதல்வரான எடப்பாடியுடன் கை கோர்த்துக் கொண்டு தினகரனை ஓரம்கட்டும் ஓரங்க நாடகங்களும் திவாகரனால் அரங்கேற்றப்பட்டன. இதனால் பகிரங்கமாக வாரிசு அரசியலை ஏற்க முடியாது என அறிவித்தார் எடப்பாடி.

மன்னார்குடியில் விழா மேலும் மன்னார்குடியில் தினகரன் தரப்பு கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது போலீஸ். இந்நிலையில் வரும் 15-ந் தேதியன்று மன்னார்குடியில் திவாகரன் தரப்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினகரன் படத்துக்கு தடை இது தொடர்பாக திவாகரன் மகன் ஜெயானந்த் வெளியிட்ட போஸ்டரிலும் மேடை மற்றும் பொதுக்கூட்ட இடங்களின் மாதிரிகளிலும் அதிமுக துணைப் பொதுச்செயலர் தினகரன் படம் இடம்பெறவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன.

மோதல் அம்பலம் ஜெயானந்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் சிலர் தினகரன் படத்தையும் போடுங்க எனவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது திவாகரன் - தினகரன் இடையேயான மோதலை பகிரங்கப்படுத்தியுள்ளது என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.