Latest News

சிக்கிமில் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பு- வைரலாகும் வீடியோ


சிக்கிம் எல்லையில் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா- பூடானின் எல்லையில் டோக்லாம் பீடபூமியை சீனா தமக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அப்பகுதியில் சாலை அமைக்கவும் சீனா முயற்சித்ததை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.

போர் பதற்றம் இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அப்படி நுழைந்த சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தடுக்க இருதரப்புக்கும் கைகலப்பானது. இதனால் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தில் இருக்கிறது.
எல்லையில் ராணுவம் குவிப்பு
எல்லையில் ராணுவம் குவிப்பு சீனா உக்கிரமாக ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக நமது ராணுவமும் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகிறது. 1962-ம் ஆண்டு போரைப் போல கடுமையாக பதிலடி தருவோம் என்றெல்லாம் சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.
கோழி கழுத்துக்கு குறி
கோழி கழுத்துக்கு குறி ஆனால் 1962-ம் ஆண்டு இந்தியா என்பதே வேறு; இப்போதைய இந்தியாவின் வலிமை என்பது வேறு என்பதை சீனா புரிந்து கொள்ளவில்லை. டோக்லாம் பீடபூமியை நெருங்கிவிட்டால் இந்தியாவையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கக் கூடிய கோழிகழுத்துப் பகுதியான சிலிகுரி பிராந்தியத்துக்கு பேராபத்து என்பதால் ராணுவம் உச்சகட்ட உஷார் நிலையில் இருந்து வருகிறது.

வைரலாகும் வீடியோ இதனிடையே சிக்கிம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த மாதம் இறுதியில் வட இந்திய சேனல்கள் இந்த காட்சிகளை ஒளிபரப்பி இருந்தன. இப்போது எடிட் செய்யப்பட்டாத முழுமையான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.