Latest News

TIYA – 2005 முதல்- 2015 வரை 10 ஆண்டு காலம் செய்து வந்த சேவைகள்...

                          பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


                     

 அன்பிற்கினிய சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹீ

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே அதே(பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப் ) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல் பகரா 2:271)

வல்ல நாயன் அல்லாஹ்வின் நாட்டத்தால், தஞ்சை மாவட்டம். அதிராம்பட்டிணத்தின் அமீரக வாழ் மேலத்தெரு மஹல்லாவாசிகளால் கடந்த 29.12.2005 அன்று தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA )என்ற அமைப்பு பாதுகாப்புடன் கூடிய நல்வாழ்வு நம் சமூகத்தில் அமைப்பதற்காக அமீரகத்தில் துவங்கப்பட்டது.இதனுடைய கிளையாக தாயகத்திலும் செயல்பட்டுக் கொண்டுவருகிறது நமது முஹல்லாவில் கல்வி சுகாதாரம். பாதுகாப்பு போன்ற பல்துறைகளில் முன்னேற்ற வாழ்வு ஏற்படுத்தி பாடுபடுவதே இவ்வமைப்பின் அடிப்படை நோக்கமாகும்.

எனவே கடந்த 29.12.2005 முதல் அமீரக TIYA பொறுப்பில் இருந்தவர்களின் கடுமையான உழைப்பிலும். மஹல்லாச் சகோதரர்களின் நல்லாதரவின் காரணமாக இவ்வமைப்பு நல்லமுறையில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! அதற்கான சான்றுகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அவை வருமாறு:
                                

v  கல்விச் சாலைகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம் சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப் C.N.M. சலீம் அவர்களை கொண்டு நடத்தியது.
                                    
                        
v  மஹல்லாவில் உள்ள இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது மஹல்லாவில் உடற்பயிற்சி மற்றும் புத்துணர்வு மையம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
                     

v  புதுக்குளத்தில் கழிவு நீர் கலந்து கொசுக்களினால் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுக்க அக்குளம் 2011-ல் சுத்தம் செய்யப்பட்டது.

v  குளிர்காலங்களில் கழிவு நீர் வடிகால்களில் உருவாகும் கொசுக்களினால் ஏற்படும் கேடுகளை தடுக்க (plumping machine) கொசு மருந்து தெளிப்பான் துணைக் கொண்டு அனைத்து கழிவு நீர் வடிகாலிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
                                                 

v  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நமது மஹல்லாவில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
                                                     
                          
v  இந்தியன் ரெட்கிராசுடன் இணைந்து இரத்த தான முகாம் மற்றும் புற்று நோய் விழிப்புணர்வு முகாம் நமது மஹல்லாவில் நடத்தப்பட்டது.
                                  
                         
v  நமது மஹல்லாவில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகள் பல செய்யப்பட்டது.

v  நமது மஹல்லாவில் ஏழ்மை நிலையில் உள்ள குமர் திருமணத்திற்கு TIYA சார்பாக இல்லாமல் TIYA அங்கீகாரத்துடன் தனிநபர்கள் மூலம் இது வரை பல உதவிகள் செய்யப்பட்டது.
                                   
 
v  நமது மஹல்லாவில் ஏழ்மை நிலையில் இருந்த பெண்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதார உதவியாக தையல் மிஷின், கிரைண்டர் மற்றும் இட்லி சட்டிகள் வழங்கப்பட்டது.
                       


                                         
தாயகத்தில் நமது மஹல்லாவில் சம்பவிக்கும் மரணங்கள் குறித்த செய்திகளை SMS,whatsApp,facebook மூலம் அமீரத்தில் வாழ் TIYA உறுப்பினர்களுக்கு மற்றும் அமீரகம் அல்லாத பிற நாடுகளில் வாழும் நமது மஹல்லாவாசிகள் உடனுக்குடன் அறியசெய்து வருகிறோம் www.adiraitiyawest.org என்கிற நமது  இணையத்தளத்திலும் பதிவு செய்து வருகிறது.

v  நமதூரில் எத்தனையோ அமைப்புகள், இயக்கங்கள் ரமளான் மாதங்களில் பித்ரு ஸக்காதை வசூல் செய்து வினியோகித்து வந்தாலும், அந்தந்த மஹல்லா நிர்வாகத்தால் விநியோகம் செய்வதனால் மட்டுமே அது முழுமையானதாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு, கடந்த 2009 ம் ஆண்டு முதல் உண்மையிலேயே தேவையுடைய மக்களை கண்டறிந்து  அவர்களையும் பெருநாள் அன்று இன்புறச் செய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பான முறையில் TIYA உறுப்பினர்களின் பித்ரு ஸகாதை வசூல் செய்து தாயகத்தில் வினியோகித்து வருகிறோம்.

v  2009-ம் ஆண்டு மொத்தம், தொகை 40.000/-பயனடைந்த குடும்பங்கள் 90

v  2010-ம் ஆண்டு மொத்தம், தொகை 40.000/-பயனடைந்த குடும்பங்கள் 90

v  2011-ம் ஆண்டு மொத்தம், தொதை 40.500/-பயனடைந்த குடும்பங்கள் 100

v  2012-ம் ஆண்டு மொத்தம், தொகை 65.000/- பயனடைந்த குடும்பங்கள் 110

v  2013-ம் ஆண்டு மொத்தம், தொகை 95.000/- பயனடைந்த குடும்பங்கள் 120

v  2014-ம்ஆண்டு மொத்தம்,தொகை60.000 பயனடைந்த குடும்பங்கள் 100

v  2015-ம்ஆண்டு மொத்தம்,தொகை 55.000 பயனடைந்த குடும்பங்கள் 90
v  பூமி வெப்பமாவதை மரம் வளர்ப்பின் மூலம் தான் தடுக்க முடியும் என்பதின் காரணமாக நமது மஹல்லாவில் உள்ள சாலையோரங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
                                 
              
v  நமது மஹல்லாவில் உள்ள வீடுகளிலிருந்து வெளியாகும் குப்பைகளினால் ஏற்படும் சுகாதார கேடுகளை, தவிர்க்கும் வகையில் நமது மஹல்லாவில் குறிப்பிட்ட பகுதிகளில் குப்பை கூடைகள் வைக்க முடிவு செய்து முதல் கட்டமாக 2011 ல் 5 இடங்களில் வைக்கப்பட்டது.
                      
               
v  செழியன் குளம் பெண்கள் பகுதியில் மறைவிடமின்றி திறந்த நிலையில் பெண்கள் குளித்து வருவதாக நமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது, அதற்கு நமது TIYA சார்பாக தென்னங்கீற்றிலான தடுப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

                                    


                                                                           
v  நமது மஹல்லாவில் உள்ள பெண்களுக்கு சுய தொழில் செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு. நமது தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் TIYA சார்பாக கடந்த 2010 ம் ஆண்டு 5 தையல் இயந்திரங்களை கொண்டு தையல் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இதுவரை 120 பெண்களுக்கு மேல் பயனடைந்து இருக்கிறார்கள்.
                           
                                          

v  அவ்வப்போது காலத்தின் அவசியம் கருதி நமது மஹல்லாவில் உள்ள 16 மற்றும் 17வது வார்டு கவுன்சிலர்களுக்கு நமது மஹல்லாவிற்கு தேவையான சாலை வசதி, கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, வீட்டுக் கழிவுகள் அப்புறப்படுத்துதல் ஆகியவைகள் குறித்து நமது TIYA சார்பாக கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது.
                               
                
v  நமது மஹல்லாவில் உள்ள ரேஷன் கடையில் வெளியே ரேஷன் பொருட்களை வாங்க வரும் பொது மக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர், ஒரு மேற்கூரை அமைத்துக் கொடுத்தால் அவர்களுடைய சிரமங்களை போக்கிவிடலாம் என்று நமது மஹல்லாவாசிகள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்று நமது TIYA சார்பாக நவீனமான முறையில் ஒரு மேற்கூரை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
                                                     

v  நமது மஹல்லாவில் உள்ள பெண்கள் குளம் அருகில் உள்ள பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பூங்கா ஓன்று ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில்  மஹல்லாவாசிகளின் பங்களிப்பில் ஒரு பூங்கா ஏற்படுத்தப்பட்டதற்கு நமது TIYA சார்பாக உதவியும் அளிக்கப்பட்டது.
                                          
     
v  கடந்த 15.12.2010-ல் நமது மஹல்லாவில் உள்ள அல் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் பள்ளி நிர்வாகத்தினரால் அப்பள்ளி புனரமைப்பு குறித்து கோரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார்கள். அதனை ஏற்று நமது மஹல்லாவாசிகளின் உதவியால் 10,4000 செலவில் அல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளி முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது.
                                           
  
v  நமது மஹல்லாவில் உள்ள அல்பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளி இமாம் மற்றும் முஅத்தின் சம்பளம் வகைக்காக அமீரக வாழ் நமது TIYA உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் நிதியிலிருந்து 2வருட காலங்களுக்கு மட்டும் நமது தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு TIYA நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை 2012 முதல் ஜுலை 2014 வரை வழங்கப்பட்டது..
                                    
         
v  அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளியின் ஒலி பெருக்கி (மைக்செட்) பழுதான நிலையில் இருப்பதை அறிந்து TIYA நிர்வாகிகள், நமது TIYA வின் தற்போதைய துணைத்தலைவர் D.சகாபுதீன் & சாகுல் ஹமீது அவர்களிடம் நிதி பெற்று சீர் செய்து தரப்பட்டுள்ளது.
                                            
                                                                 
v  நமது மேலத்தெரு மஹல்லா ஜும்மா பள்ளியில் மின் தடை ஏற்படும் போது ஜும்ஆ தொழுகைக்கு வருகிறவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு, ஒரு ஜெனரேட்டர் ஜும் பள்ளியில் அமைக்க வேண்டுமென நமது தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு உதவும் வகையில், அமீரக TIYA முன்னாள் செயலாளர் S.M. சிராஜுத்தீன் முயற்சியில் நமது TIYA சார்பாக ரூ 1.00,000/- ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

v  நமது மஹல்லாவாசிகள் அவ்வப்போது கொண்டு வரும் கோரிக்கைகள் குறிப்பாக ஏழை குமருக்கான உதவி, ஏழை மாணவர்களுக்கான உதவிகளை தனி நபர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, நமது TIYA -வின் ஒத்துழைப்புடன் பல உதவிகள்  செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 4 வருட காலங்களாக ஏழை மாணவ-மாணவிகளுக்கு நோட் புக் வழங்கப்பட்டு வருகிறது.
                                          

v  கடந்த 2013-ம் ஆண்டும் நமது மஹல்லாவில் உள்ள ஏழ்மை நிலையில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு கண்டறிந்து சுமார் 15 மாணவ-மாணவிகளுகு நோட் புக்கும் சுமார் 15 மாணவி-மாணவிகளுக்கு ஒரு வருட காலத்திற்கு ஸ்கூல் பீஸ் கட்டி தரப்பட்டுள்ளது.
                                       

v  நமது மஹல்லாவில் உள்ள ஒரு ஏழையின் வீடு பழுதான நிலையில் உள்ளது. அவர்களுக்கு உதவுவதற்கு எவ்வித வழிகளும் இல்லை அதனால் அவர்களின் பழுதடைந்த வீட்டை சரி செய்துதர கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கை ஏற்கப்பட்டு நமது TIYA உறுபினர் சகோ. சாகுல் ஹமீது ( சிகப்பு தொப்பி) அவர்களை பொறுப்பாளராக நியமித்து, நமது TIYA உறுப்பினர்களின் உதவியால் ஒரு நிரந்தரமான இருப்பிடத்தை அந்த ஏழை குடும்பத்திற்கு நமது மஹல்லா நிர்வாகிகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
                                                
   
v  நமதூரில் உள்ள அனைத்து மஹல்லாவாசிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஒரு அமைப்பு அவசியம் என கருதியோர்கள் ஒன்றிணைந்து 'அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு (AAMF ) உருவாக்கத்தில், நமது TIYA  நிர்வாகிகளின் பங்களிப்பு மகத்தானது என்றால் அது மிகையில்லை. AAMF சார்பாக 30.09.2011 அன்று நடைபெற்ற பொதுக்குழுவிற்கு TIYA-வின் சார்பாக நமது பங்கும் அளிக்கப்பட்டது.

v  மேலே உள்ள காரியங்களிலும் முக்கியமாக நமது மஹல்லா தலைவராக இருந்த மர்ஹும் அல்ஹாஜ் M.M.S. அப்துல் வஹாப் (சாச்சா) அவர்கள் வபாத்தனாவுடன், நமது தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு புது நிர்வாகம் அமைப்பதில் தாமதம் ஏற்ப்பட்டு  வந்ததை கருத்தில் கொண்டு, நமது TIYA நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு நமது மஹல்லா நிர்வாகம் அமைப்பதற்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளது.

                                         

v  கடந்த 2013 ஹஜ்ஜீப் பெருநாளின் போது நமது முஹல்லாவாசிகளால் அறுக்கப்பட்ட குர்பானி ஆடுகளின் தோல்கள் 67 வசூலிக்கப்பட்டு. தோல்கள் அனைத்தையும் விற்பனையின் மூலம் மொத்தம் ரூபாய் 22,110 கிடைத்தது. இதை தாயக TIYA நிர்வாகிகளின் முடிவின்படி நமது மஹல்லாவில் உள்ள தேவையுடைய ஏழைகளை கண்டறிந்து, அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூபாய் 500 வழங்குவது எனத் தீர்மானித்து அதன்படி நமது மஹல்லாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வில் முதல் கட்டமாக 14 நபர்களுக்கு மாதாந்திர உதவி வழங்குவது  என தீர்மானித்து கடந்த 05.01.2014 அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தோலின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு முதியோர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறோம்.
                                       
                                              
v  கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஆதார் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து புகைப்படம் எடுக்காதவர்களுக்கு நமதூர் பேரூந்து நிலையம் அருகில் உள்ள ஒன்றாம் நம்பர் அரசினர் பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்ற போது. நமது மஹல்லாவாசிகள் ஒன்றாம் நம்பர் பள்ளிக்கூடத்திற்கு நமது மஹல்லாவாசிகளுக்கு சென்று வர மிக சிரமம் ஏற்படுமென்பதை கருத்தில் கொண்டு நமது TIYA நிர்வாகிகளின் முயற்சியால் இது சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அதாவது பட்டுக்கோடை வட்டாசியரிடம் (தாசில்தார்) தாசில்தாரிடம் முறையிட்டு அது போன்று நமது மஹல்லாவில் உள்ள அரசினர்  உயர் நிலைப் பள்ளியில் நமது மஹல்லாவாசிகளுக்கு புகைப்படம் எடுக்க முகாம் நடத்த கோரிக்கை வைத்து அதனை தாசில்தார் அவர்கள் ஏற்று 3 தினங்கள் நமது தெரு அரசினர் பள்ளியில் மறு புகைப்படம் எடுக்கும் முகாம் மிக சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
                          

v  வல்ல நாயன் அல்லாஹ்வின் மிக பெரும் கிருபையால் நமது மஹல்லாவில் உள்ள பெண்கள் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை நமது தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளுடன் நமது தாயக TIYA கிளை நிர்வாகிகளும் இணைந்து சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து மிக சிரமங்களுக்கு மத்தியில் பெண்கள் குளத்திற்க்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.
                              


v  நமது மஹல்லவில் உள்ள பாதாள சாக்கடையில் தேங்கி கிடக்கும் குப்பை கூளங்களினால் கொசுகள் உற்பத்தியாகி அதனால் பல சுகாதார கேடுகள் ஏற்ப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு நமது TIYA வின் சார்பாக 16வது வார்டுக்கு 5000 ரூபாய்க்கு ஒரு அரபான் வண்டி வாங்கி கொடுக்கப்பட்டுயுள்ளது
               

v  அல்பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளி வாசலில் பெண்கள் பயான், மற்றும் நோன்பு காலங்களில் பெண்களின் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு பள்ளியின் மாடியில் மேற்கூரை அமைத்து கொடுக்கப்பட்டது.

v  மேலத்தெரு இளைஞர்களின் கோரிக்கையான உடற் பயிற்சி மையம் மற்றும் நூலகத்தை கட்டிடமாக கட்டி மராமத்து செய்து தரவேண்டுமென்ற கோரிக்கையை TIYA ஏற்று அதற்கான பணிகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

v  ஊரில் கேன்சர் விழிப்புணர்வு முகாம் துண்டு பிரசுரங்கள், வழங்குவது மருத்துவ உதவிகள், கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவது மற்றும் தெருவின் நலன்களின் அக்கரையோடு  தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான சேவைகளை புதிய நிர்வாகம் தொடர்ந்து செய்யுமென தெரிவித்து கொள்கிறோம்.

என்றும் அன்புடன்
TIYA நிர்வாகம் 
 
3 comments:

 1. தாயகத்தில் நமது மஹல்லாவில் சம்பவிக்கும் மரணங்கள் குறித்த செய்திகளை SMS,whatsApp,facebook மூலம் அமீரத்தில் வாழ் TIYA உறுப்பினர்களுக்கு மற்றும் அமீரகம் அல்லாத பிற நாடுகளில் வாழும் நமது மஹல்லாவாசிகள் உடனுக்குடன் அறியசெய்து வருகிறோம் அமெரிக்காவில் வாழும் முஹல்லாவாசிகள் எத்தனை பேருக்கு மரணச்செய்தி அனுப்பி உள்ளீர்கள் எனக்கு இதுவரை வந்ததில்லை.இப்படி ஒருதலை பச்சமாக நடப்பதை கைவிட்டுவிட்டு எல்லோருக்கும் செய்திகளைபகிர்ந்து கோள்ளவும்
  அன்புடன்
  அப்துல் வாஹித்

  ReplyDelete
  Replies
  1. Assalam Walaikum,

   Brother Mr.Waheed,

   I am SM.Sheik, I write this reply for your above posting as capacity of TIYA's Secretary (Dubai).

   First of all, I feel regret that There is no word from your side Stating "Appreciation" of our Services offered for the Last (10) Ten years to our Muhalla (Street), instead of that you wrote your complaints Immediately.

   Anyway, Brother for your kind information, We never treat any of our Muhallah members partiality, So kindly we hereby request you to rectify your word(ஒருதலை பச்சமாக)Since we do not have your mobile number in our records we were not able to post our messages.

   Please be informed that We do keep posting our death messages as well as other beneficial messages through whatsapp to all our members whoever residing in all around the world those whose mobile numbers are available in our data-base.

   Inshallah, Hereafter we will send our Muhallah messages to your whatsapp So therefore we kindly request you to provide us your mobile numbers so that we could add you in our TIYA Group, for enabling you to receive our Muhallah messages in future.

   Thank you.

   SM.Sheik (On Behalf of TIYA)

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  காக்கா நாங்கள் யாரும் இதுவரை எந்த விசையத்திலும் யாருக்காகவும் ஒரு போதும் ஒருதலை பச்சமாக நடந்ததும் கிடையாது நடக்கபோவது கிடையாது நமது முஹல்லாவாசிகள் அனைவருக்கும் நமது செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்க்க வேண்டுமென்பது தான் எங்கள் நோக்கமே தவிர யாரையும் பிரித்து பார்க்க வேண்டுமென்பது எங்கள் நோக்கம் கிடையாது ( ஒரு தலை பச்சமாக ) என்ற குற்றச்சாட்டை தாங்கள் திருத்திக்கொள்ளவும்.
  தாயகத்தில் நமது முஹல்லாவில் சம்பவிக்கும் மரணங்கள் குறித்து செய்திகளை SMS,whatsApp,facebook மூலம் அமீரகத்தில் வாழ் நமது முஹல்லாவாசிகள் மற்றும் பிற நாடுகளில் வாழும் நமது முஹல்லாவாசிகளுக்கும் அறிய செய்து வருகிறோம் என்பது உண்மை தான் இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் கிடையாது உண்மைக்கு புறணான செய்தி எதுவும் இதில் கிடையாது அமெரிக்காவில் யார் யாரேல்லாம் தொலைபேசி நமபர் தந்தார்களே அவர்கள் அனைவருக்கும் இது வரைக்கும் போய் கொண்டுதான் உள்ளது இதில் தாங்கள் அடக்கம் வந்து கொண்டு தான் இருந்தது எனக்கு நன்றாக தெரியும் தாங்கள் எத்தனையோ முறை பதிலும் தந்தீர்கள் இதற்க்கு இடையில் தாங்கள் தொலைபேசி எண் மாற்றம் செய்திருக்கலாம் அப்படி மாற்றம் செய்யும் போது தாங்கள் எங்களுக்கு தெரிவிக்கவேண்டும் தாங்கள் தெரியப்படுதாமைக்கு நாங்கள் பொருப்பு கிடையாது
  என்றும் அன்புடன்
  மாலிக்

  ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.