Latest News

ஆர் . எஸ் .எஸ் காரனிடம் பாடம் கற்போமா ?


என்ன???..ஆர் எஸ் எஸ் காரன்கிட்ட பாடமா?..அப்டீன்னு பல்ல கடிச்சுகிட்டு கேட்டீங்கன்னா..ஆமா””..அதுதான் பதில்!..என்ன? ச்சுருக்குன்னு இருக்கா??? இருக்கனும்!!! அதுக்காகத்தான் அப்டி சொன்னேன்...


என்ன இவனுக்கு பைத்தியம் புடிச்சுபோச்சா??ஒரு தீவிரவாத கூட்டத்துக்கிட்ட பாடம் கத்துக்க சொல்ரான்!.அப்டீன்னு நீங்க நெனைக்கலாம்...


வேரென்னத்த சொல்ல! காலா காலமா நமக்கு ஒவ்வொன்னுலையும் அவன் தான பாடம் எடுக்குறான்(அவன் பாணியில)!.அப்ரம்தான அரக்கபறக்க வாரிசுருட்டிக்கிட்டு எழுந்திருக்கிறோம்!. அதுவும் ஒரு ஆறுமாசமோ ஒரு வருஷமொன்னு நாள் கணக்குலயே மறந்து போயிடும் நமக்கு!..அப்டியே பழகிட்டோமே!!! சரி இப்போ என்ன வந்துச்சு,இப்டி பேசுரதுக்குன்னு கேட்டா??..இருக்கு...ஒற்றுமைங்கிர ஒன்னு நம்மகிட்ட உப்புக்கு கூட இல்லைங்கிரது தெரியும் தானே!. அதுக்கான பாடம் நமக்கு அவன் பாணில எடுக்குரதுக்கு முன்னாடியே, நாம கத்துக்கிறது அவசியம்தானே!.அதத்தான் சொன்னேன்..சரி.நேரடியாக விஷயத்துக்கு வருவோம்!
கடந்து வந்த பாதையையும்,இன்னும் நடந்துகொண்டிருக்கும் பாதையையும் பார்க்கும் போது,பொதுவாக முஸ்லிம்கள்,அதிலும் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள்,ஒற்றுமை எனும் புள்ளியில் ஒன்றுபட வேண்டிய அவசியத்திலும் அவசியமான தருணம் எப்போதோ உருவாகி விட்டது...ஆனால் காலதாமதமாகிவிட்ட இந்தச் சூழலிலும் இன்னும் நாம் அது குறித்த சிந்தனை கூட இல்லாது இருப்பது எப்படிப்பட்ட கையறு நிலை?


மாநில வாரியா நமக்குட்ரெய்லர் காட்டிட்டே வர்ரது,நமக்கான எச்சரிக்கையா தெரியலையா?. காஷ்மீர், டெல்லி, ஒரிசா, மும்பை, அயோத்தி,அஸ்ஸாம்,குஜராத், கர்நாடகா, ஆந்திரான்னு,நமக்கு படிப்பினை போதாதா...இன்னும் நாம இது குறித்து சிந்திக்கவே ஆரம்பிக்கல!..இன்னும் தமிழகம்ன்னு வந்து நம்ம தலைலையும் விடிஞ்சாத்தான் திருந்துவோமா??..அப்பொ திருந்தி ஒரு பிரயோசனமும் இல்லை...

அருமை சகோதர சகோதரிகளே!.நமக்குள்ள,மார்க்க காரணங்களை முன்வைத்து பிரச்சனை செய்துகொள்வதிலேயே நாம் பிஸியா இருக்கோம்..ஆனா நம்மை சுத்தி என்ன நடக்குதுன்னு என்னைக்காவது சிந்திச்சு இருப்போமா?.ம்ம்ஹும்..

நம்மல நடுவுல விட்டு நம்மை சுத்தி வலைபின்ன,பின்னிக்கொண்டு ஒரு பெரிய நிறுவனப்படுத்தப்பட்ட/படுத்தப்படாத கூட்டம்,பல முகங்களில் இயங்கிக்கொண்டு இருக்குங்கிறது உங்களுக்கு தெரியுமா?


அடிமை இந்தியாவிலும்,சுதந்திரத்தின் போதும்,சுதந்திரத்திற்கு பிறகும் என, இந்தியத்திருநாட்டின் குடிமக்களான நம்மை துடைத்தெறிய,ஒரு பெருங்கூட்டமே அயராது உழைத்துவருவது உங்களுக்கு தெரியுமா?


நம்மை அழித்தொழிக்க நூற்றாண்டு திட்டங்களை தீட்டி,ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதை நிறைவேற்றி,இந்திய முஸ்லிம்களை இயன்றவரை கொன்றுகுவித்து,அதை படிக்கல்லாக்கி அதன் மேலேறி சிம்மாசனம் அடைய முழுநேர ஊழியம் பார்க்கும் குரூரர்களை உங்களுக்கு தெரியுமா?


முஸ்லிம்களை அழிப்பதானால் என்ன சும்மா ஆங்காங்கே கலவரம் செய்வது என எண்ணிக்கொண்டீர்களோ!..இல்லை..பல்வேறு விதமான தாக்குதல்கள்,அது அதற்கு பல்வேறு விதமான இயக்கங்கள்,அதை செயல்படுத்த அதில் கைதேர்ந்த விற்பன்னர்கள்,என நியமித்து,பல படிநிலை வியூகங்களை வகுத்து,அதில் முதலாவது தோற்றால் இரண்டாவது,இரண்டாவது தோற்றால் மூன்றாவது என அதை எவ்வித சருக்கலும் இன்றி திறம்பட செய்து வருவது உங்களுக்கு தெரியுமா?


முஸ்லிம்களை திட்டமிட்டு தீவிரவாதிகளாக சித்தரித்து,அதை வெகு விமர்சையாக விளம்பரப்படுத்த ஊடகம் ஊடாக உளவியல் ரீதியான தாக்குதல் நடக்கிறது.அதற்கு நம்மை அறியாமல் நாமும் பலியாகிறோம். இதனால் வெகுஜன ஹிந்துக்கள் பார்வையில் தொடர்ச்சியாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே நிறுத்துவது. அதனால் இயல்பாகவே முஸ்லிம் என நினைத்தாலே,அவன் விஜயகாந்த் படத்தில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதி போலவே தோற்றம் உருவாகிறது.இதனால் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது கூட,”இவனுக தானே!.நல்லா வேணும்..என்ற மனப்பான்மைக்கு சகோதர ஹிந்துக்கள் மாற்றப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?


(பதிவு நீளமா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா படிங்க..)

இன அழிப்பு தவிர்த்த திட்டமிட்டு இலகுரக கலவரங்களை ஆங்காங்கு நடத்திவிட்டு செல்வது...இது அன்றாட செய்தியாக நம் கண்களில் படலாம்..அப்பாட நல்லவேல உயிர்சேதம் ஏதும் இல்லை என நிம்மதியடைவதோடு பத்திரிக்கையை திருப்ப பழகி இருக்கிறோம்.. அனைவரும் தங்களின் 20,30 ஆண்டு வாழ்வையே முதலீடாக்கி காத்துவளர்த்த நிறுவனங்களை ஒரே நாளில் அழித்தொழித்து மறுநாள் அவர்களை பிச்சைக்காரர்களாக்கி தெருவில் முடங்கச்செய்யும் இத்தகைய கலவரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?


ஆனால் இப்படியான கலவரங்களின் பின்னனியை எந்த பத்திரிக்கையும் வெளியிடுவதில்லை.அதனால் அதன் பின்புலமும் நமக்கு தெரிவதில்லை.. ஆனால் இவை அபாயகரமானவை.உதாரணமாக ஹைதராபாத் கலவரத்தை எடுத்துக்கொண்டால்,அங்கு நடந்த திட்டமிட்ட பொருளாதார அழிப்பை யாரும் கவனத்தில் கொண்டுவரவில்லை. ஆம்..முஸ்லிம்களின் நிறுவனங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, சூரையாடப்பட்டு, அன்றைய தினத்தில் மட்டும் முஸ்லிம்களின் 80 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சர்வ நாசம் செய்யப்பட்டது உங்களுக்கு தெரியுமா?


முஸ்லிம் பெண்களை,அவர்களில் திருமணம் ஆன/ஆகாத,என எவ்வித கணக்கும் இல்லாது ஒரு கூட்டமே இவர்களை களவாட பயிற்சி பெற்று,பணியில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?


பள்ளி,கல்லூரி,பணியிடம்,வலையுகம் என  இவர்களின் கரங்கள் மூலை முடுக்கெங்கும் முஸ்லிம் பெண்களை காவுவாங்க விரிவது உங்களுக்கு தெரியுமா?


இவர்களை கவர்ந்து சென்று,சீரழித்து,சக்கைகளாக குப்பைகளில் வீசிவிட்டு அடுத்த பெண்களை தேடி நடக்கும் கால்களை உங்களுக்கு தெரியுமா?


இன்னும் எவ்வளவு தெரிந்தால்,விழித்துக்கொள்வோம் சகோதர சகோதரிகளே!.. இன்னும் எவ்வளவு விலை கொடுத்தால் நாம் நமது நிலையை உணர்ந்து கொள்ளப்போகிறோம்?


இத்தனை தெரியுமா?” கேள்விகளுக்கு நம்மில் பெரும்பாலரது பதில் என்ன???


ஹ்ம்..தெரியாது!...


ஏன்?..


அட எனக்கு அதவிட முக்கியமான வேலை இருக்குதப்பா...இன்னைக்கு பொதுக்கூட்டம் இருக்கு,இன்னொரு இயக்கத்தோட வண்டவாளங்கள பத்தி புட்டு புட்டு வைக்க போராங்களாம்... அது முக்கியமா இல்ல இது முக்கியமா?.. இது சொல்லக்கூடிய காரணங்களில் 1000த்தில் ஒன்றுதான்.. இன்னும் 999 உண்டு...அதை அந்தந்த இயக்கத்தார்,அந்தந்த சூழலுக்கு ஏற்ப சொல்லிவிட்டு நடையை கட்டுகின்றனர்.


நமக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் பேசி பூதாகரமாக்கி, மொத்த சிந்தனையையும் அதில் குவித்து,அதிலே மயிர்பிளக்கும் ஆய்வுகளை நிகழ்த்தி, இறுதியில் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு (உறவை) பிரியும் மாபெரும் வெற்றிக்களிப்போடு??? உறங்கச் செல்கிறோம்!!...


இதைத்தவிர வேறு சிந்தனைகள் இல்லை,இல்லை..இல்லவே இல்லை... இன்று உலகில் முஸ்லிம்கள் பலிகொடுக்கப்படுவதற்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும், உலகில் இரண்டாவது அதிக முஸ்லிமகள் வாழும் இந்தியத்திருநாட்டில்,முஸ்லிம்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒற்றை காரணத்தினால் மட்டுமே! சகோதரர்களே!.. இவை அத்துனையையும் முறியடிக்க நாம் கையில் எடுக்கவேண்டியது என்ன சகோதரர்களே???


ஒன்றும் பெரிதாக அல்ல,குறைந்தபட்ச அடிப்படை தேவையான ஒற்றுமை என்ற உன்னதமான ஒன்றுதான் சகோதரர்களே!... முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருக்கிறோம், ஆனால் இயக்கக்குடைகளுக்கு கீழே,நாம் முஸ்லிம்கள் என்பதை விட அந்தந்த இயக்கத்தினராகவே இருக்கிறோம்...ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்,


இயக்ககுடைக்கு கீழ் நிற்கும் சகோதரர்,இன்னொரு இயக்கம் சார்ந்த சகோதரரின் மானம் கண்ணியத்தை அமானிதமாக பார்ப்பதில்லை. அவற்றை தெருவில் சில்லரைகளாக சிதறவிட்டுவிடுகிறார்...இந்த இயக்க குடை உங்கள்களுக்கு பல நன்மைகளை பெற்றுத்தருவதாக இருந்தாலும், அது பலவற்றை  தடுத்துவிடும் தடையாகவும் இருப்பதை யாரும் உணர்கிறார்களா? என தெரியவில்லை..


இப்படியான குற்றச்சாட்டு வடிவிலான வாதம்,அடுத்த கட்டத்தில் வசவுகளை வீசத்தொடங்கி, அடுத்தடுத்த கட்டங்களில் வெற்றிகரமாக ஒற்றுமை எனும் கட்டமைப்பை செதில் செதிலாக சிதைத்துக்கொண்டே போகிறது... இது நமக்கு என்ன பலனை தந்துவிட்டது சகோதரர்களே!.. சிந்தித்துப் பார்த்தால்! சிற்சில மார்க்க அறிவை விவாத நோக்கில் பெற்றதை தவிர ஒன்றும் இல்லை..சகோதரர்களே!


இன்னும் நிலைமை எத்தனை கவலைக்கிடம் என்றால்,ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் வெவ்வேறு இயக்கசார்புடையவர்களாக இருப்பதால், அனைவரும் தனித்தனி...இயக்கசண்டை குடும்ப ஒற்றுமையையும் சீரழிக்கிறது..பின்பு எப்படி சமுதாய ஒற்றுமை????


அருமை சகோதர சகோதரிகளே!..இங்கு நான் எந்த இயக்கத்தையும் சாடவில்லை. அனைத்து இயக்கங்கள் மீதும் எனக்கு அபிமானமும் உண்டு, விமர்சனங்களும் உண்டு.இயக்கங்கள் இருக்கவேண்டியதுதான்.. இயக்க தொண்டனாகவும் இருக்கலாம், கொள்கைகள் வேறுபாடு இருக்கலாம்.


ஆனால் நாம் அனைவரும் குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படையில், ஒன்றுபட முடியாதா?..இந்த குறைந்தபட்ச என சொல்வதற்கே எனக்கு வெக்கமாக,கேவலமாக இருக்கிறது சகோதரர்களே!.நாம் இத்தனை தாழ்ந்துவிட்டோமா என்று???


முடியும்.குறைந்த பட்சம் அல்ல,அதிகபட்ச காரணிகளைக்கொண்டே நாம் ஒருங்கிணைய முடியும்..அதற்கு இயக்கதலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சாதிக்கலாம்.ஆனால் அவர்கள் அதை செய்ய தயாராக இல்லை..இயக்க சகோதரர்களாகிய நாம்! அவர்கள் சொல்லும் காரணங்களை மறந்து,அதனை கடந்து ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டிக்கொள்ள முனைவோம்.இன்னொரு இயக்கத்தவனை எதிரியாக பார்க்கும் மனோநிலையில் இருந்து விடுபடுவோம்..


நமக்கு முன் காத்திருக்கும் பிரச்சனைகளை முன்னிருத்தி,அவைகளை வெல்ல முற்படுவோம்.


கட்டுரையின் பிற்பகுதி பொதுவாக அனைத்து இயக்கத்தினர் மீதும் குற்றம் சுமத்துவதாக நினைக்கலாம்,அதனால் சிலர் தார்மீக ரீதியில் கோபமும் கொள்ளலாம்.நாங்கள் அப்படியல்ல..என்று.ஆனால் அந்த கோபம் கட்டுரையின் முற்பகுதியை மறைத்துவிடாது இருக்கட்டும்...

அந்தந்த இயக்கத்தினரின் அதிகார பூர்வ தளங்களில் நடக்கும் குடுமி சண்டை போதாதென்று..அவர்களின் அடிபொடிகளும் தனிதளங்களை ஆரம்பித்து... இவர்களின் பங்குக்கு செயல்பட ஆரம்பித்து விட்டார்கள்...ஏன் இதை சொல்றேன்னா??
இத்தனையும் எழுதி முடித்துவிட்டு,எதார்த்தமாக,எப்போதும் நோட்டமிடும், ஹிந்துத்தீவிரவாத தளத்தை பார்க்கும் போது அங்கு ஓர் அதிர்ச்சி தரும் பிரச்சாரம் பரவ விட்டிருந்தார்கள்...


கீழே உள்ள கட்டத்தில்,நம்மை சார்ந்த தருதலைகள் போட்டுக்கொள்ளும் தெருச்சண்டை, இப்போது விஞ்ஞான வளர்ச்சி பெற்றதன் விளைவாக, வலைச் சண்டையாகி, அதில் வாந்தியெடுத்த அசிங்கங்கள்....


அதன் விளைவு...அதை அப்படியே காப்பி செய்து....இந்த ஹிந்துத் தீவிரவாதிகள்..இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு முட்டுக்கொடுத்து விட்டார்கள்...

இது இவன்களின் லேட்டஸ்ட் பதிவுல பதிவானது...நல்லா வேல நம்ம இயக்கத்தோட வசவுகள பதியலைன்னு யாரும் நிம்மதி அடையவேண்டாம்..நேரத்துக்கு தக்கவாறு,பதிவுக்கு தக்கவாறு, எல்லா இயக்க தளங்களில் இருந்தும் இது போன்ற  வாசகங்கள் எடுக்கப்பட்டு பதிக்கபடுகிறது...என்னாங்கடா...உங்க தெருச்சண்டையோட விளைவு...எங்க போய் நிக்கிதுன்னு பாத்தீங்களா??... இந்தத்தளம் மட்டுமல்ல..இஸ்லாமிய இயக்க தளங்கள் அனைத்தும் இவர்களது பார்வையில் தான் உள்ளது...அவ்வப்போது நீங்கள் திட்டி தீர்த்துக்கொள்வதை பாப்கார்ன் சகிதம் உக்கார்ந்து பார்த்துவிட்டு...அதில் இப்படி எதாவது வார்த்தை விழுத்தால் அதை கவ்விக்கொள்ள ஆளாய் பறக்கும் வெறியர்கள் உங்கள் எழுத்துக்களை வட்டமிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா???

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இந்த ஹிந்துதீவிரவாதிகள் தான் நம்மீது திணித்து வந்தார்கள்...இப்போ அவர்களுக்கு அந்த வேலை வேண்டாம்.. நாங்களே பார்த்து "கொல்கிறோம்"ன்னு களத்துல இறங்கிட்டிங்களா???

நல்லா நியாபகம் வச்சுகங்க...அல்லாஹ்வின் அச்சம் துளியாவது உள்ளத்தில் இருந்தால் அதை வைத்து உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்...வாய் இருக்கு வலை இருக்குன்னு இஷ்டம் போல கிருக்கித்தள்ளும் வேலையை விட்டுவிடுங்கள்.. இந்த சமூகத்தின் பிளவுகளுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் குத்தி இறங்கும் உளிகளாக செயல்படுகிறீர்கள் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்... எல்லாவற்றிற்கும் மொத்தமாக நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்..... கவனம்..
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்....ஊரை இரண்டல்ல.. நூறாய் கூறுபோட்டுவிட்டீர்கள்....அவர்கள் கும்பாபிஷேகமே நடத்துகிறார்கள். இதன் விளைவுகளில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்கனும்.. அதற்கு முன் தெளிவு பெருவோமா????


அல்லாஹ் எங்களை இந்த தீமைகளில் இருந்து காப்பாயாக!!!..

குறிப்பு.
இது தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது...தயவு செய்து யாரும் தங்களை நியாயப்படுத்த முயலவேண்டாம்..சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுங்கள்...
நான் மட்டுமா திட்டுறேன்..தோ..அவன் என்ன என்னல்ல கேக்குறான் பாருன்னு தயவு செய்து லிங்குகளை கொடுத்து திரும்பவும் அதே தவறை செய்யாதீர்கள்..இது பானை சோற்றுக்கு பதம். அவ்ளோதான்.. முடிந்தால் ஒற்றுமைக்கு ஆதரவு கொடுத்து இதை அனைவரும் அறியச்செய்யுங்கள்..

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் வழங்க போதுமானவன்..
நன்றி  :
அன்புடன்
ரஜின்
sunmarkam.blogspot.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.